11 வயது சிறுமி ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் உயிரிழந்ததாக வந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் அவசியமில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்ததாக பரவிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏழ்மையான அந்தக் குடும்பத்தினர் ரேஷன் பொருட்களையே பிரதானமாக நம்பி இருந்தனர். அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் அட்டை வேண்டும் எனக் கேட்ட நிலையில், அவர்களிடம் ஆதார் இல்லை. எனவே ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. எனவே அந்தச் சிறுமி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில உணவுத்துறை அமைச்சர் சரயு ராய், ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் அட்டை அவசியமில்லை என்று கூறியிருக்கிறார். ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவற்றைக் கூட ரேஷன் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சிறுமி மரணம் குறித்து ஜார்கண்ட் அரசு ஒரு விசாரணையை நடத்தியது. அந்த விசாரணை முடிவில் சிறுமி பட்டினியால் இறக்கவில்லை. மலேரியா காய்ச்சலால் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்