Published : 21,Oct 2017 09:47 AM

பேச்சு சுதந்திரத்திற்கு திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்

The-DMK-always-stands-for-freedom-of-speech--creative-expression-M-K-Stalin

பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பாஜகவின் இந்த கோரிக்கைக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘விமர்சனங்களை ஒழித்துக்கட்டும் பாஜகவின் முயற்சி ஜனநாயக கொள்கைகளுக்கு முரண்பாடானது’ என்று கூறியுள்ளார். 

முன்னதாக மெர்சல பட விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்