Published : 05,Jan 2017 08:41 AM

விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க முதலமைச்சர் உறுதி.. தமிழிசை தகவல்

TN-chief-minister-promise-to-save-TN-farmers

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக்கத்தில் நீரின்றி விவசாயம் பொய்த்ததால் விவசாயிகளின் மரணம் நாளுக்கு நாள் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தமிழக விவசாயிகள் பிரச்னை குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என முதலமைச்சரிடம் தான் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்