Published : 14,Oct 2017 05:18 PM
ராகுல் காந்தியுடன் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் சந்திப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் திருநாவுக்கரசர் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்தனர்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பங்கேற்றார். தமிழகத்தில் அரசியல் நிலவரம் குறித்து இருவரிடமும் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது.