[X] Close

ஆசியக் கோப்பை ஹாக்கி: 2வது வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?

Asian-Cup-Hockey--India-Meets-bangladesh

ஆசியக்‌ கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி, இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பங்களாதேஷ் அணி, பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்திருந்தது. முதல் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உற்சாகத்துடன் மன்பீரித் சிங் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.


Advertisement

Advertisement
[X] Close