இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறும்போது, ’ ஓய்வு முடிவை ஒரே நாள் இரவில் எடுத்துவிடவில்லை. இதற்கு தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. இதுதான் சரியான தருணம் என நினைத்து முடிவெடுத்துள்ளேன். அடுத்த 5, 6 மாதங்களுக்கு உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகள் எதுவும் இல்லை. அதனால் விலகுவதற்கு இதுவே சரியான நேரம்.
அணியின் ஓய்வறையில் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம். இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகள் என்னால் எளிதில் விளையாட முடியும் என்று சொல்கிறார்கள். மக்கள் கேள்வி எழுப்பும் முன்பே ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். சொந்த ஊர் (டெல்லி) ரசிகர்களின் முன்பு நவம்பர் 1-ம் தேதி நடக்கும் போட்டியில் இருந்து விடைபெறுகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் எனது முதலாவது ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினேன். அதே இடத்தில் ஓய்வு பெறுகிறேன். ஓய்வுக்கு பிறகு என்ன என்பதை, பிறகுதான் முடிவு செய்வேன். ஐ.பி.எல் போட்டிகளிலும் விளையாடமாட்டேன்’ என்றார் நெஹ்ரா.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!