ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
வடக்கு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து இன்று காலை முதல் ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஹஜினில் உள்ள பரிபல் கிராமத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கேணல் ராஜேஷ் கலியா தெரிவித்தார். அதேபோல் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மூன்று ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். மேலும் இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் இன்னும் பதுங்கி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இராணுவ வீரர்களின் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Loading More post
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்