Published : 10,Oct 2017 02:49 PM

டெங்கு பரப்பும் 20 ஆயிரம் கடைகளுக்கு அரசு நோட்டீஸ்

Dengue-Fever-Notice-Issued-to--Shops

டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்ததாக தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  

கொசு உற்பத்தியாகும் அளவுக்கு பொருட்களை போட்டு வைத்திருந்ததால் தொற்றுநோய் தடுப்பு இயக்ககம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நீர் தேங்கக்கூடிய டயர் உள்ளிட்ட பொருட்களை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும், பழைய பொருட்களை அகற்றாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள‌து. சென்னையில் 2 ஆயிரம் கடைகளுக்கும், தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கடைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொற்றுநோய் பரவ காரணமாக இருந்த குற்றச்சாட்டில் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 269ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்