’சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீடு நவம்பர் 14 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் சக்கபோடு போடு ராஜா. இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். ஜி.எல்.சேதுராமன் இயக்கியிருக்கிறார். சிம்புவின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சந்தானம். இன்று அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு சிம்பு இசையமைத்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தப் படத்தின் இடம்பெறும் சக்கபோடு போடு ராஜா பாடல் சமீபத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவின் இசையில் யுவன் ஒரு பாடலை பாடியுள்ளார். அதைவிட பெரிய விஷயம் டி,ராஜேந்தரும் அவரது மனைவி உஷா ராஜேந்தரும் ஒரு பாடலை பாடியுள்ளனர். மகன் இசையில் அப்பா, அம்மா இருவருமே பாடியுள்ளனர். கலக்கு மச்சா டவுளத்துல பாடலை ரோகேஷ் எழுத அனிருத் பாடியுள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் மற்றும் ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தின் இசை விழா நவம்பர் 14 தேதி சத்யம் திரை அரங்கில் நடைபெறவுள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!