[X] Close

போலீசை தாக்கிய ரவுடி மீது துப்பாக்கிச் சூடு‌

Police-fire-at-Rowdy

தூத்துக்குடியில் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்டோரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். 

தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார். பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த ரவுடி முத்துக்குமார் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் அங்கு சென்றனர். அப்போது உதவி ஆய்வாளர் டென்னிஸ் மற்றும் காவலர் முத்தையா ஆகியோரை  அரிவளால் தாக்கிவிட்டு முத்துக்குமார் தப்பியோட முயற்சித்தார். உடனே போலீசார் துப்பாக்‌கிச்சூடு நடத்தி அவரைப் பிடித்தனர். காயமடைந்த முத்துக்குமார், டென்னிஸ், முத்தையா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close