கெயில் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முற்பட்டால் விவசாயிகளுடன் இணைந்து திமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமி்ழகத்தில் உள்ள விளைநிலங்களின் ஊடாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களை பதிக்க, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சாமல் விளைநிலங்களைக் காப்போம் என்ற விவசாயிகளின் குரலை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இத்திட்டத்தை அனுமதிக்கப் போவதில்லை என்று மறைந்த ஜெயலலிதா உறுதிமொழி அளித்ததையும், இதுபற்றி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடகாவின் திட்டம் போன்றவற்றில் தமிழகத்தின் உரிமைகளை கோட்டைவிட்ட அதிமுக அரசு, கெயில் விவகாரத்தில் தூங்கிவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் விவசாய நிலங்கள் மத்தியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் மேற்கு மண்டல விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்