Published : 06,Oct 2017 11:53 AM
எதையும் எதிர்பாராத தளபதி சேனைகள் நாங்கள்: விஜய் நற்பணி மன்ற பொறுப்பாளர் மகிழ்ச்சி

எதையும் எதிர்பாராத தளபதியின் சேனைகள் நாங்கள் என்று ட்விட்டரில் நடிகர் விஜய் நற்பணி மன்ற பொறுப்பாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்திற்கான தடை விலக்கப்பட்டத்தை அடுத்து விஜய் சார்பில் எவ்வித விளக்கமும் கூறப்படவில்லை. அட்லியும் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் நற்பணி மன்றத்தின் பொறுப்பாளர் ஆனந்த் தனது ட்விட்டரில், எதையும் எதிர்பாராத அன்பும், அளவற்ற மரியாதையும் கொண்ட தளபதியின் சேனைகள் நாங்கள். கோடிக்கணக்கான இதயங்களின் அன்பாலும் பிரார்த்தனையாலும் பல தடைகளைத் தாண்டி வீரநடையுடன் மெர்சல் வெற்றி வாகை சூட வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் ஐரோப்பாவிலேயே மிக பெரிய திரையரங்கமான லீகிராண்டெக்ஸில் திரையிடப்படும் 2வது தமிழ்ப்படம் என்ற பெருமையை தளபதியின் மெர்சல் படம் பெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆனந்த் புதுச்சேரியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.