[X] Close

கரூரில் பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை: ஸ்டாலின் சாடல்

DMK--MK-Stalin-Slams-TN-Government

எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘ எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாகவும்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கரூரில் கட்டாயப்படுத்தி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
விழாவில் பங்கேற்பதற்காக தனியார் பள்ளி பேருந்துகளில் 100 நாட்கள் வேலைத் திட்ட பணியாளர்கள் அழைத்துச் செல்லப்படுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழில் அழைப்பாளர் தலைமைச் செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தலைமை செயலாளர் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். அவர் இச்செயலை கண்டிக்கவில்லை எனில் நீதிமன்றத்தை நாடவும் தயார்’ எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close