Published : 03,Oct 2017 12:02 PM
வட சென்னை அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

வடசென்னை அனல் மின் நிலையத்தி்ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதலாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகள், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகள் என மொத்தம் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணாமாக முதலாவது பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, கோளாறு சரிசெய்யப்பட்டது. பின்னர் மின் உற்பத்தி தேவையான அளவு இருப்பதாகக் கூறி கடந்த 29 மற்றும் 30ஆம் தேதிகளில், 2ஆவது நிலையின் இரு பிரிவுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மின் உற்பத்தி தேவை காரணமாக முதலாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.