Published : 03,Oct 2017 11:58 AM
ஒகேனக்கலில் 7வது நாளாக பரிசலுக்கு தடை

ஒகேனக்கலில் நீர்வரத்து குறைந்த போதிலும் 7வது நாளாக பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியில் இருந்து, 13 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு நலன் கருதி பரிசல் இயக்குவுதற்கும், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குமான தடை 7வது நாளாக நீடிக்கிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்புகின்றனர்.