Published : 03,Oct 2017 07:33 AM

டெங்குவால் அச்சம்: 6 மாதக் குழந்தையுடன் பெண் தற்கொலை

Fear-of-Dengue--Female-suicide-with-a-six-month-old-baby

பேளுக்குறிச்சியில் குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அச்சமடைந்த பெண் தன் 6 மாதக் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கமல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் வேதனையடைந்த தாய் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெங்கு பற்றி போதிய விழிப்புணர்வு மற்றும் முறையான சிகிச்சை இல்லாததே இந்த துயரமான சம்பவத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால், டெங்கு குறித்த விழிப்புணர்வும், அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. டெங்கு காய்ச்சல் அச்சத்தினால் பெண் தன் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேளுக்குறிச்சி பகுதி மக்களிடையே அச்சம் கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்