[X] Close

போதைப்பொருட்கள் மூட்டை, மூட்டையாக பறிமுதல்

Tirupur-Gutka-confiscated

திருப்பூரில் வாகன சோதனையின் போது, ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பிரதான சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி ஆட்டோ ஒன்றை மறித்து சோதனை நடத்தினர். அதில் மிட்டாய்களுக்கு நடுவே தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற போதை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், போதைப்பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. பின்னர் மூட்டை, மூட்டையாக இருந்த போதைப்பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Advertisement
Related Tags : TirupurGutkaconfiscated
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close