Published : 14,Mar 2023 10:51 PM

பணவீக்கம் 25 மாதங்களில் இல்லாத அளவு குறைவு - மத்திய அரசு சொன்ன காரணம் இதுதான்!

Inflation-at-25-month-low---Central-Govt

நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 25 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் உணவு பொருட்கள் விலைவாசியை குறிக்கும் மொத்த பணவீக்கமானது பிப்ரவரி மாதத்தில் 3.85% ஆக குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 25 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் உணவுப்பொருட்கள் விலைவாசியை குறிக்கும் மொத்தவிலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.85 விழுக்காடாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முந்தய ஜனவரி மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 4.73 சதவிகிதமாக இருந்தது. தொடர்ச்சியாக 9 ஆவது மாதமாக மொத்த விலை பணவீக்கம் குறைந்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் 2.95 சதவிகிதத்தில் இருந்து 2.76 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தாதுப்பொருட்கள், ரசாயன பொருட்களின் விலை குறைந்ததும் காரணம் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தியை காண கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்க

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்