Published : 14,Mar 2023 11:01 PM
கடலின் ஆழத்தில் இப்படியொரு அகழியா! ஆழ்கடலில் பொதிந்திருக்கும் ரகசியம்தான் என்ன?

இயற்கையின் அதிசயங்கள் எண்ணிலடங்காதது. அதில் ஒன்று தான் கடல். அத்தகைய கடலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொரு நாளும் கடலைப்பற்றிய நிறைய அரிய தகவல்கள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. கடலை நம்பி வாழ்பவர் எவரையும் கடல் கைவிடுவதில்லை என்றே மீனவர்கள் உள்ளிட்டோர் நம்பிக்கையுடன் கூறுவார்கள்.
அந்த வகையில் ஒவ்வொருவரும் கடலின் ஆழத்தைப்பற்றியும் அதில் வாழ்ந்து வரும் உயிரினங்கள் பற்றியும் எண்ணெற்ற தகவல்களை கண்டுபிக்க முயன்று தான் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் புரியாத புதிராகவே கடல் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட புதிரான கடலின் ஆழம் பற்றியும் அதன் மர்மங்கள் பற்றியும் தான் காணப்போகிறோம்.
ஒரு மனிதன் கடலில் இறங்கினான் என்றால் அவனால், 10 அடிக்கு கீழே எந்த ஒரு உபகரணமும் உதவி இல்லாது செல்லமுடியாது. மூச்சு திணறி இறந்து விடுவான். அதே போல், ஒரு நீர் மூழ்கி கப்பலானது சுமார் 2460 மீட்டர் வரை செல்லக்கூடியது அதை தாண்டி அக்கப்பலானது இன்னும் ஆழத்திற்கு போக முற்படுமே ஆனால், கடலின் அழுத்தம் தாங்காமல் அது வெடித்துவிடும் அல்லது பழுதாகி விடும்.
சரி, ஒரு மனிதன் கடலின் ஆழத்தை அரிய முற்பட்டு, பாது காப்பு உபகரணங்களுடன்(ஆக்ஸிஜன் சிலிண்டர்) கடலுக்குள் இறங்கினான் என்றால், அவனால் சுமார் 1000 அடி வரை தான் பயணம் மேற்கொள்ள முடியும், அதையும் தாண்டி அவன் முன்னேறி செல்வான் என்றால், அழுத்தம் காரணமாக அவனும் இறக்க நேரிடும்.
சரி, கடலின் ஆழம்தான் எவ்வளவு இருக்கும் ? அதை எப்படி கண்டுபிடிப்பது?...
இதை பற்றி தெரிந்துக்கொள்ள தான், கடல் ஆய்வாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த முயற்சியின் விளைவாக தெரியவந்தது தான் பசிபிக் கடலில் உள்ள மரியானா அகழி. கடல் ஆராய்சியாளர்கள் கடலின் ஆழத்தை தெரிந்துக்கொள்ள முயன்று கடலை ஆராய்ச்சி செய்தபொழுது, பசிபிக் கடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடலின் ஆழமானது அதிகரித்து சென்றது, அதை சேலஞ்சர் என்ற கப்பலைக்கொண்டு அராய்ந்ததில், இந்த இடத்தின் ஆழம் சுமார் 35,840 அடி என்கிறார்கள். இந்த அகழியின் நடுவில் ஒரு மிகப்பெரிய பள்ளம் இருந்ததை கண்டு, அதற்கு ”சேலஞ்சர் டீப்” என்று பெயரிட்டனர்.
சரி.... அதன் ஆழத்தை 35840 அடி என்று எப்படி கணக்கிட்டு கூறினார்கள் என்றால், சமீபத்தில் திரைப்பட இயக்குநருமான ஜேம்ஸ் கேமரூன் என்பவர் ரோபாடிக் சப்மரைன் என்ற நீர்மூழ்கியின் உதவியால் 2012 ல் மரியானா அகழிப்பகுதியில் கிட்டத்தட்ட 35761 அடி ஆழத்திற்கு சென்று வந்துள்ளார். அதேபோல் அகமத் காப்ர், ஹெர்பெர்ட் என்பவரும் 700 அடி ஆழம் வரை சென்று உலகசாதனை செய்துள்ளனர்.
இவர்களுக்கெல்லாம் முன்னதாக 1960ல் ஜாகுவச் பிக்கார்ட், மற்றும், டான் வால்ஸ் என்பவர் இப்பகுதியில் கிட்டத்தட்ட 36000 அடி ஆழம் வரை அடிவரைக்கும் ஆழம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
ஆக... தற்பொழுது வரை கடலின் ஆழமனது 36000 அடி வரையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கும் கீழ் கடலின் ஆழம் இருப்பதாக கடல் ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.
அட்வான்ஸ் ஓஷனோகிராபி கருவியால் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகள்
36000 அடி ஆழத்திற்கு கீழாக இது வரை எந்த ஒரு பொருளாலோ அல்லது, எந்த ஒரு மனிதனாலும் செல்ல இயலாத, இருள் சூழ்ந்த ஆழ்கடலில் ஆபத்தான உயிரினங்கள் வாழ்ந்து வருகிறதாம், அதில் ஒன்று தான் கோலோசெல் என்னும் அரிய வகை உயிரினம். இது சுமார் 45அடி நீளம் கொண்டது என்கிறார்கள்.
இதை தவிர, மலைகளும், மலைகளுக்குள் குகைகளும், எரிமலைகளும் இருக்கிறதாம். எரிமலைகள் உமிழும் வெப்பம் காரணமாக ,நீரின் கதகதப்பு தன்மையால் சில வகை உயிரினங்கள் உயிர் வாழ்ந்து வருவதாகவும் கூறுகின்றனர். இதை தவிர, கடலின் ஆழத்தில் சில நதிகளும் ஓடுவதாக சொல்கிறார்கள். நன்னீர் ஊற்றும் அங்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆழ்கடலைப் பற்றிய ஒவ்வொரு தகவலும் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கின்றது. ஆழ்கடலின் ஆய்வுப் பயணம் இனியும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. நாமும் ஆழ்கடலில் ரகசியங்களால் மூழ்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறோம்.
ஜெயஸ்ரீ அனந்த்