Published : 14,Mar 2023 10:10 AM

நாமக்கல்: 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு

Namakkal-A-tragic-decision-taken-by-a-woman-after-throwing-her-2-sons-into-a-well

நாமக்கல் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் பெண்ணின் தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சிமோகனூர் போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி காக்கா தோப்பு, புது தெருவைச் சேர்ந்தவர்கள் கோபி - குணவதி தம்பதியர். இவர்களுக்கு சுஜித் பிரியன், பிரணவ் பிரியன் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், கோபி தனது மாமனார் கேசவனுடன் மோகனூர் உழவர் சந்தை அருகே டீக்கடை நடத்தி வருகிறார்.

நேற்றிரவு டீக்கடையில் இருந்து கேசவன் முன்னதாக வீட்டுக்குச் சென்றதாக தெரிகிறது. அப்போது, கேசவனுக்கும் அவரது மகள் குணவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து வீட்டிற்கு கோபி, தனது மனைவி மகன்களை காணாததால் தேடியுள்ளார்.

image

அப்போது அருகில் உள்ள கிணற்றில் இரண்டு மகன்கள் சடலமாகவும், குணவதியும் மின் மோட்டார் பைப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மோகனூர் போலீசார், மூன்று; சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் தந்தை மகளுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் பெற்ற தாயே இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் குணவதியின் தந்தை கேசவனும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

image

இச்சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மூன்று உயிரிழப்புகள் ஏற்பட்டது அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்