Published : 09,Mar 2023 08:26 PM
கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னட திரைப்படமான ‘முஃப்தி’ -யின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக, சிம்பு நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம், வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்பு உடன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், சென்றாயன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷனில் ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்புவின் 48-வது படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தேசிங்கு பெரியசாமி சிம்புவின் 48-வது படத்தை இயக்குகிறார்.
An alliance forged to push frontiers of success & across generations! #STR48#Ulaganayagan#KamalHaasan#Atman#SilambarasanTR#BLOODandBATTLE#RKFI56_STR48@ikamalhaasan@SilambarasanTR_@desingh_dp#Mahendran@RKFI@turmericmediaTM@magizhmandrampic.twitter.com/4i7uawXwHG
— Raaj Kamal Films International (@RKFI) March 9, 2023
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான தேசிங்கு பெரியசாமியின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் ரசிகர்களை மட்டுமின்றி, நடிகர் ரஜினிகாந்தையும் ஈர்த்து இருந்தது. இதனால் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். மேலும் தனக்காக ஒரு த்ரில்லர் கதை தயார் செய்யுமாறு தேசிங்கு பெரியசாமியிடம் அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால், ரஜினியின் 169 அல்லது 170-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் த.செ. ஞானவேல் இயக்க, லைகா தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தனது அடுத்தப்படம் ரஜினியுடன் இல்லை என்றும், ரஜினி ரசிகர் என்பதால் அவரது படத்தை இயக்க ஆவலாக உள்ளதாகவும் சமீபத்தில் விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று சிம்பு - கமல் கூட்டணியில் புதியப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Dreams do come true #STR48#Ulaganayagan#KamalHaasan#Atman#SilambarasanTR#BLOODandBATTLE#RKFI56_STR48@ikamalhaasan@SilambarasanTR_@desingh_dp#Mahendran@RKFI@turmericmediaTM@magizhmandrampic.twitter.com/QxdCkUPFo9
— Silambarasan TR (@SilambarasanTR_) March 9, 2023
Thank you @SilambarasanTR_ brother for accepting my Script and believing in me. You have been unbelievably supportive from the day one
— Desingh Periyasamy (@desingh_dp) March 9, 2023
Thank you GOD https://t.co/pPaRYBUpYLpic.twitter.com/wseusJwR7BI feel extremely grateful for the unimaginable miracles of my life. Having the privilege of narrating a story to Ulaganayagan @ikamalhaasan sir for being given the opportunity to direct under his prestigious @RKFI is a dream come true..Miracles do happen https://t.co/Bu8NZqP9wR
— Desingh Periyasamy (@desingh_dp) March 9, 2023‘காட்டுப்பசிக்கு’ விருந்து! #STR48#Ulaganayagan#KamalHaasan#Atman#SilambarasanTR#BLOODandBATTLE#RKFI56_STR48@ikamalhaasan@SilambarasanTR_@desingh_dp#Mahendran@RKFI@turmericmediaTM@magizhmandrampic.twitter.com/DbRraevnkZ
— Desingh Periyasamy (@desingh_dp) March 9, 2023