[X] Close

செப்.22-க்கு முன் ஜெ.வை கவனித்த மருத்துவர் யார்?: முன்னாள் அமைச்சர் ஹண்டே கேள்வி

who-was-the-previous-doctor-for-jayalalitha-ask-hv-hande

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு முன்னதாக அவரது உடல்நிலையைக் கவனித்த மருத்துவர்கள் யார் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே, அப்போலோ மருத்துவக்குழு போயஸ் கார்டன் வந்தபோது, மயக்க நிலையில் இருந்த ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு 508 மில்லி கிராம் என்று அதிகபட்ச அளவாகவும், ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு மிகக்குறைந்த அளவாக 48 ஆகவும் இருந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்து வந்த குடும்ப மருத்துவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ள ஹண்டே, நீரிழிவு நோய் நிபுணர்கள் யாரும் ஜெயலலிதாவைக் கவனிக்க நியமிக்கப்பட்டிருந்தார்களா என்றும் வினா எழுப்பியுள்ளார். இதுபோன்ற பல்வேறு சந்தேகங்களை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close