Published : 11,Feb 2023 03:16 PM

”நடுவர்களே ஒன்னும் சொல்லல” ஜடேஜாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி; பதிலடி கொடுத்த ரவி சாஸ்திரி!

icc-fined-jadeja-for-25-percentage

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 25 சதவிகிதம் அபராதம் விதித்திருக்கிறது.

பார்டர் கவாஸ்கர் தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவின் நாக்பூரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக களமாடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்திருக்கிறது.

ஆனால் இந்த போட்டியில் ஐசிசியின் விதிகளை மீறியதற்காக இந்திய அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நடுவர்களுக்கு தெரிவிக்காமல் கைவிரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Management Ends Speculation, Tells Match Referee Jadeja Applied Pain-Relief Cream On Finger

இதனிடையே இந்த போட்டியில், பந்தை சேதப்படுத்தியதாக ஜடேஜா மீதான பரபரப்பு கருத்தும் பரவி வந்தது. தற்போது அபாரதம் விதித்திருக்கும் நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்திருப்பதும் இதனூடே பரவி வருகிறது.

அதில், “வலி நிவாரணிக்கான ஆயின்மென்ட்டை விரலில் பூசியதை வைத்து அவர் பந்தை சேதப்படுத்த முயற்சித்தார் எனக் கூறுகிறார்கள். அது வெறும் வலி நிவாரணிதான். நடுவரே இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத போது ஏன் இதை சர்ச்சையாக்குகிறார்கள்? நாக்பூர் களத்தில் பந்து ஸ்பின் ஆக எதையும் செய்யவே தேவையில்லை.

ஆஸ்திரேலிய அணியில் கூட எந்த பிரச்னையும் இல்லையே. நடுவர்களே அமைதியாக இருக்கும்போது ஏன் இதனை விவாத பொருளாக்க வேண்டும்?” என ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்