Published : 07,Feb 2023 12:46 PM

'இந்திய அணிக்கு 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால் இவரை எடுங்க' - ரவி சாஸ்திரி சொல்லும் ஐடியா!

Ravi-Shastri-wants-Kuldeep-Yadav-to-play-as-India-3rd-spinner-vs-Australia-Jadeja-Axar-are-pretty-similar

இந்திய அணிக்கு மூன்றாவது ஸ்பின்னர் தேவைப்பட்டால் குல்தீப் யாதவ் தான் ஆட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.   

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாத ஆஸ்திரேலியா, இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை வெல்ல முனைப்பு காட்டி வருகின்றது. அதேவேளையில் 2012ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காத இந்திய அணி இத்தொடரிலும் வாகை சூடி ஆதிக்கத்தை தொடர தீவிரம் காட்டி வருகிறது.

image

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது தொடர்பாக இந்திய அணிக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். ''இந்த தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் அவரை வைத்து நீங்கள் அளவுக்கு அதிகமாக வியூகங்களை வகுக்கக் கூடாது. எந்த மாதிரி திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவரது போக்கிலேயே விட்டுவிட வேண்டும். எனவே அஸ்வின் குறித்து அதிகமாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

image

இந்தியாவுக்கு 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால் குல்தீப் யாதவ் தான் ஆட வேண்டும். ஜடேஜா மற்றும் அக்‌ஷர் இருவருமே ஒரே மாதிரியான பவுலர்கள். ஆனால் குல்தீப் வித்தியாசமானவர். ஒருவேளை டாஸில் தோற்று முதல் நாளே பந்தை ஸ்பின் செய்ய வேண்டும் என்றால் அது குல்தீப்பால் தான் முடியும். ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இல்லாத களத்தில் தாக்கம் ஏற்படுத்துவதே குல்தீப்பின் சிறப்பு. அவரை போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் இருபுறமும் டேர்ன் செய்வார்கள்.

இந்திய ஆடும் லெவன் அணியில் சூர்யகுமார் யாதவ் அல்லது சுப்மன் கில் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வது கடினம். 5-வது வரிசைக்கு மிகச்சிறந்த வீரரை தேர்வு செய்தாக வேண்டும்.  ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சம் பின்னடைவு தான். தற்போது இஷான் கிஷன், கே.எஸ்.பரத் ஆகிய விக்கெட் கீப்பர்களில் யாரை தேர்வு செய்வது என்பது கடினமாகத் தான் இருக்கும். ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக சுழன்று திரும்பும் பட்சத்தில், அதற்கு ஏற்ப மிகச்சிறந்த கீப்பர் விளையாட வேண்டும்'' என்று ரவி சாஸ்திரி கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்