திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.5 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியில் வசித்து வந்த சித்ரா என்பவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். இவர் அங்குள்ளவர்களிடம் 1 கோடி ரூபாய் ஏலச்சீட்டு நடத்தியும், தமது மகளுக்கு திருமணம் வைத்திருப்பதாக கூறி தம்மிடம் சீட்டு போட்டவர்களிடமே கைமாற்றாக ரூபாய் 50 லட்சத்திற்கு மேல் வாங்கியும் உள்ளாதாக கூறப்படுகிறது. தன்னிடம் சீட்டு போட்டவர்களுக்கு சீட்டு பணமும் தரவில்லை கடனாக மகள் திருமணத்திற்கு வாங்கிய பணத்தையும் தரவில்லை எனவும் முன்னாள் பூந்தமல்லி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணிமாறனுடன் பணத்தை இழந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தியிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல காக்களூரில் தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூபாய் 20 லட்சம் மோசடி செய்ததாக வேல்பாண்டி என்பவர் மீதும் பாதிக்கப்பட்வர்கள் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?