Published : 09,Jan 2023 07:37 PM

”வைகை அணையில் இருந்து எவ்வளவு நீர் வீணாக கடலில் கலக்கிறது?” - நீதிபதிகள் கேள்வி

The-case-of-farmers

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த காந்தி, மேலப்பசலை உக்கிரபாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், "வைகை ஆற்று நீரைக் கொண்டே சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம், மேல்குடி உள்ளிட்ட 16 பெரிய கண்மாய்கள், 10 சிறிய கண்மாய்கள் மற்றும் 25 குளங்கள் மூலம் விவசாய பணிகள் நடக்கும் வகையில் நாட்டார் கால்வாய் அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயம் நடைபெறுகின்றது.

image

தற்போது வைகை அணையில் அதிகபட்ச அளவு தண்ணீர் உள்ளதால் வைகையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு பல்வேறு கண்மாய்களும் நிரம்பியுள்ளன. மேலும் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. பல்வேறு கால்வாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கால்வாய்கள் அடைக்கப்பட்டு வைகை நீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். மாறாக வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் நீர் கடந்த 4 நாட்களாக திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டார் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், எங்கள் பகுதி பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி, மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து 16 கிராமங்கள் பயனடையும் வகையில் நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து:

வைகை அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை 16 கிராம மக்கள் பயன்படும் வகையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாமே.?இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது-

அரசு தரப்பு விளக்கம்:

வைகை அணையில் தற்போது 52 அடி நீர் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. எனவே மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு தண்ணீர் திறக்க இயலாது - வைகை அணையில் 52 அடி நீர் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் போதிய அளவு உள்ளது. எனவே, மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு தண்ணீர் வழங்குவதற்கு போதிய நீர் இல்லை என தெரிவிக்கப்பட்டது

நீதிபதிகள் கேள்வி:

  • வைகை அணையின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?
  • பாரம்பரிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு எவ்வளவு தண்ணீர் அனுப்பப்படுகிறது.?
  • ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டது போக மீதம் தண்ணீரின் அளவு மற்றும் எவ்வளவு தண்ணீர் கடலில் கலக்கிறது? -
  • அணையில் மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா?

என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைச் செயலரிடம் ஆலோசனை மேற்கொண்டு தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

வழக்கு விசாரணை ஜனவரி 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்