Published : 07,Jan 2023 07:06 PM

தமிழில் புத்தக வாசிப்பு சூழல் வாசிப்பு குறைந்து வருகிறதா?என்ன சொல்கிறார்கள் எழுத்தாளர்கள்

சென்னையில் நடந்து வரும் 46வது சர்வதேச புத்தக கண்காட்சி மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் எண்ணெற்ற எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் அவைகள் வாங்கப்பட்டு படிக்கப்படுகிறதா? என்றால்... அது கேள்விக்குறி தான்.
அடிப்படையில் இப்பொழுது அனைவருக்கும் படிக்கும் ஆர்வமென்பது குறைந்துக்கொண்டு வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதுவும் கல்லூரி மாணவர்களிடம் தமிழ் கதைகள் படிக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவு.

புத்தகம் படிப்பதை விட அதை கதையாக கேட்க விரும்பும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு நேரமின்மையும் ஒரு காரணம், இத்தகைய சூழலில், தமிழ் வாசிப்பு சூழல் எப்படி இருக்கிறது என்பது பற்றி எழுத்தாளர். நிவேதா லூயிஸ், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

image

கேள்வி: தமிழக வாசிப்பு சூழல் எப்படி இருக்கிறது?

இளைஞர்களுக்கு காட்சி ஊடகங்களின் மேல் விருப்பம் அதிகரித்ததால் அவர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதில் பெண்களிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. காத்திரமான எழுத்துக்கள் மக்களைப்போய் சேரவில்லை.

கேள்வி: மாநிலங்களையும் தாண்டி, மாவட்ட அளவிலும் புத்தக கண்காட்சி விஸ்தரிக்கப்பட்டுள்ளதே... அப்படி என்றால் வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது என்று தானே நினைக்கத்தோன்றுகிறது.?

உண்மை தான். வாசிக்கும் பழக்கத்தை புத்தக கண்காட்சிகள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு சில மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சில புத்தகங்கள் கிடைப்பதில்லை என்று சிலர் எழுத்தாளர்களிடம் அழைபேசியில் அழைத்து வாங்குவதும் உண்டு. இதிலிருந்து சிறுநகரங்களில் அவர்களுக்கு படிக்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்றும் தெரிந்துக்கொள்ளலாம். என்று முடித்தார் பெண் எழுத்தாளர் நிவேதா லூயிஸ்.

image

இதே கேள்விகளை எழுத்தாளர் அழகிய பெரியவனிடம் கேட்டோம். அவர் கூரியதாவது.
வாசிப்பு பழக்கம் மக்களிடையே குறையவில்லை. அதே சமயம் காலத்திற்கு ஏற்றாப்போல் வாசிப்பை மாற்றிக்கொண்டார்கள். அந்த அந்த துறைக்கு ஏற்றாப்போல் தங்களது வாசிப்பை அதிகரித்துக்கொண்டார்கள் . பள்ளிகளில் நூலகங்கள் அதிகரித்துள்ளது . அதே சமயம் தேவையான நூல்களை தரவிறக்கம் செய்து படித்தும் வருகிறார்கள்.

குழ்ந்தைகளுக்கு சரியான புத்தகத்தை தேர்வுசெய்ய முறையான கை காட்டல் இருக்கிறதா ?
அது மிக மிக குறைவு.. ஏனெனில் ஆசிரியர் மத்தியிலும் பேராசிரியர் மத்தியிலும் படிக்காதவர்கள் அதிகம். அவர்கள் பாடங்களை தவிர்த்து ஏனைய வாசிப்புகளை கையில் எடுப்பதில்லை. நுனிப்புல் மேய்ந்த கதைதான். என்றார்.

இத்தகைய சூழல் மாறவேண்டும், மாற்றத்தை நாம் தான் கொண்டுவரவேண்டும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்