Published : 01,Jan 2023 09:18 PM
வெள்ளம் வெள்ளமாக வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்! கழுகு பார்வை காட்சிகள்
வெள்ளம் வெள்ளமாக, வெள்ளி கடற்கரையில் குவிந்த மக்கள்..! கழுகு பார்வை காட்சிகள்
கடலூர் வெள்ளி கடற்கரையில் இன்று லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடினர். குதிரை சவாரி அங்கிருக்கும் ராட்டினங்களில் குழந்தைகள் விளையாட வைத்து மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். நேற்று மாலை 6 மணிக்கு வெள்ளி கடற்கரையில் கூட தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் இன்று கூடுதலான நேரம் அனுமதிக்கப்பட்டது.
இதனால் பிற்பகலில் இருந்தே கூட்டம் அலைமோதியது. மாலை அவர்கள் வீடு திரும்பும் வேலையில் அதிகளவு வாகனங்கள் வந்த காரணத்தினால் தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலூர் நகரப்பகுதி வரும் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் கழுகு பார்வை காட்சியை புதிய தலைமுறை பதிவு செய்துள்ளது வாகனங்கள் அணிவகுத்து வருவது வில்லிலிருந்து அம்பு செல்வது போல் நீண்ட வரிசையில் ஒளி வெள்ளத்தில் வாகனங்கள் கடந்து சென்றது. இது பிரத்தியோகமாக புதிய தலைமுறை கழுகு பார்வையில் காட்சி படுத்தி உள்ளது.