Published : 28,Nov 2022 11:01 AM
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அரசு பேருந்து விபத்து

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மாநகர பேருந்து விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சென்னை அண்ணா சாலையில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கிச் சென்ற 2 A மாநகர பேருந்து, இன்று காலை திடீரென சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது விபத்து ஏற்பட்டது. அப்போது பயணிகளின் பாதுகாப்புக்காக நடைபாதை அருகே மோதி விபத்து ஏற்பட்டதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. போக்குவரத்து உடனடியாக சரி செய்யப்பட்டது. எனினும் காவல்துறை மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து விபத்து பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.