Published : 26,Nov 2022 08:14 PM
சாண்ட்விட்ச் பார்சலில் B***h என எழுதுவதா? - ஓட்டல் மேனேஜரின் விளக்கத்தால் திகைத்த பெண்!

ஸ்டார்பக்ஸின் காஃபி மற்றும் சப்வே-ன் சாண்ட்விட்ச் போன்றவற்றில் வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் மீது அவர்களது பெயர்களை எழுதுவது வழக்கம். இதனை பெரும்பான்மையான மக்கள் விரும்புவதும் உண்டு. இருப்பினும் சமயங்களில் அவ்வாறு பெயர்களை எழுதுவதால் சில குளறுபடிகளும் நடப்பதாகவும் கூறப்படுவதுண்டு.
அந்த வகையில், பெண் ஒருவரின் சாண்ட்விட்ச்சில் அவர் ஆர்டர் செய்த உணவின் பெயரை ஆங்கிலத்தில் B***h என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இதைக் கண்டு அதிர்ந்துப்போன அப்பெண் ரெஸ்டாரென்ட் ஊழியரிடம் சென்று கேட்டபோது அவர் கொடுத்த விளக்கம்தான் ஆச்சர்ய்யப்பட வைத்திருக்கிறது.
I took my sandwich out of the bag and I saw THIS! I went back and spoke with the manager an demanded an explanation. He looked confused, so I pointed at the writing and asked why someone felt the need to write it. He answered, "because you ordered a BLT with cheese?" pic.twitter.com/JlVGQUw85a
— Festive Irish Lady (@SpookyIrishLady) November 20, 2022
இதுதொடர்பாக @SpoorkyIrishLady என்ற பயனர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் வாங்கியிருந்த சாண்ட்விட்ச் பார்சலை எடுத்த போது B***h என எழுதப்பட்டிருந்ததுதான் என் கண்ணில் பட்டது. உடனே ரெஸ்டாரென்ட் மேனேஜரிடம், சென்று சாண்ட்விட்சில் எழுதியிருந்தது பற்றி விளக்கம் கேட்டேன்.
They definitely did that on purpose like the would definitely put ch lower or write chz to avoid this scenario, they definitely thought it was funny to write it like that.
— Degenerate (@Ianperson1) November 22, 2022
இதைக் கேட்ட மேனேஜர் சற்று குழம்பிப்போய், கொஞ்சம் நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பின்னர், நீங்கள் BLT வகை சாண்ட்விட்ச்சை Cheese உடன் ஆர்டர் செய்ததால் BLTCH என ஷார்ட்டாக குறிப்பிட்டோம் என்றதும் திகைத்துப் போய்விட்டேன்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
To be fair, that's clearly an l. Although since BLT is an acronym it should really be upper case.
— Philip Woodward (@philw1982) November 21, 2022
I'd give it a C- but I don't think it's offensive.
அந்த பெண்ணின் பதிவு ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் கவனத்தை பெற்றதோடு இதேப்போன்று பலரும் Black Olive - BO என்றும், Vegetarian Delight Pizza - VD என்றும் குறிப்பிடுவார்கள் என்றும் விளக்கமளித்திருக்கிறார்கள். மேலும், BLTCH என்பதை ஆங்கிலத்தின் Upper case எழுத்துகளில் முறையாக எழுதியிருக்கலாம் என்றும் கமென்ட் செய்திருக்கிறார்கள்.
We used to have a Vegetarian Delight pizza. (Really good--onions, peppers, mushrooms, black olves, and extra cheese). Notation: VD.
— Kat Fletcher (@kfletcherwrites) November 22, 2022
Black Olives—BO
I once got a taco that appeared to be labeled, "shit." It was an acronym for something else (can't recall what), but we all still laugh about "shit tacos."
— DevonDeanIndy (@DevonScottIndy) November 21, 2022