Published : 26,Nov 2022 06:41 PM
டீசல் இல்லாமல் நின்ற 108 ஆம்புலன்ஸ்.. சிகிச்சையே கிடைக்காமல் நோயாளி இறந்த பரிதாபம்!

ஆம்புலன்ஸில் எரிபொருள் இல்லாததால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல இருந்த நோயாளி உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியிருப்பது பல விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது.
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் இன்று நடந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதார உட்கட்டமைப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக பலரும் கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
பன்ஸ்வாராவின் தனாப்புர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல புறப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ரத்லம் சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்த போது எரிபொருள் இல்லாமல் போனதால் ஆம்புலன்ஸ் பாதியிலேயே நின்றிருக்கிறது.
मामले में जांच शुरू कर दी गई है। 108 एंबुलेंसों को एक निजी एजेंसी द्वारा संचालित किया जाता है,एजेंसी राज्य सरकार द्वारा अधिकृत है और कंपनी के ऊपर एंबुलेंस के रखरखाव का ज़िम्मा होता है। कहां लापरवाही रही है यह जांच के बाद सामने आएगा: हीरालाल ताबियार,CMHO बांसवाड़ा (25.11)
— ANI_HindiNews (@AHindinews) November 26, 2022
(2/2) pic.twitter.com/hzjuLiF1Me
ஆகையால் நோயாளியின் உறவினர்கள் உள்ளிட்டோர் கீழே இறங்கி ஆம்புலன்ஸை கையால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தள்ளிய பிறகு 500 ரூபாய்க்கு டீசலும் வாங்கி ஊற்றிய போதும் ஆம்புலன்ஸ் இயங்கவில்லை. எனவே வேறொரு ஆம்புலன்ஸை வர வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஆம்புலன்ஸ் வரவே ஒரு மணிநேரம் ஆனதால், உடல் நலிவுற்றிருந்த நோயாளி ஆம்புலன்ஸிலேயே எந்த சிகிச்சையும் கிடைக்காமல் பரிதாபமாக இறந்திருக்கிறார்.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், மாநில அரசு உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து பேசியுள்ள மாநில சுகாதார அதிகாரி ஹிராலால் தபியார், “108 ஆம்புலன்ஸ் சேவை மாநில அரசின் அங்கீகாரத்தால் தனியாரால் இயக்கப்படுகின்றன. ஆம்புலன்ஸ்களின் பராமரிப்புக்கு அந்த நிறுவனம் பொறுப்பாகும். எந்த இடத்தில் அலட்சியம் நடந்தது என்பது விசாரணைக்கு பிறகே வெளிவரும்” எனக் கூறியிருக்கிறார்.