[X] Close

ஆசிரியை தண்டனை: 5ம் வகுப்பு மாணவன் தற்கொலை

The-teacher-is-convicted--5th-class-student-suicide

ஆசிரியர் தண்டித்ததால் 5-ம் வகுப்பு மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

உ.பி மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள செயின்ட் அந்தோணி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான் நவ்நீத் பிரகாஷ் என்ற சிறுவன். கடந்த 15 தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய அவன், சோகமாக இருந்துள்ளான். பிறகு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கடந்த புதனன்று உயிரிழந்தான். 

இந்நிலையில், நவ்நீத் பையில் ஒரு கடிதம் இருந்ததை சிறுவனின் தந்தை எடுத்துள்ளார். அதில், என்னை மூன்று வகுப்புகள் முடியு வரை, எனது ஆசிரியை வெளியே நிற்க வைத்தார். மனம் பாதிக்கப்பட்டது. அதனால் எனது உயிரை மாய்த்து கொள்கிறேன். இதுபோன்ற கடுமையான தண்டனையை இனிமேல் மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம் என எனது ஆசிரியையிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று எழுதியுள்ளான். இந்த கடிதத்தை ஆதாரமாக வைத்து மாணவனின் தந்தை ரவி பிரகாஷ், காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வகுப்பு ஆசிரியை பாவனாவை கைது செய்துள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close