[X] Close

மேக்கப் டெஸ்ட்டுக்காக அமெரிக்கா பறந்தார் விஜய் சேதுபதி

Actor-vijay-sethupathi-goes-to-America

மேக்கப் டெஸ்ட் செய்து கொள்வதற்காக நடிகர் விஜய் சேதுபதி அமெரிக்கா பறந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பில் வருடத்திற்கு 7-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதனால் எப்போதுமே விஜய் சேதுபதி பிஸிதான். இருந்தாலும் எந்த பேட்டியிலும் மிக எளிமையாகவே பதிலளிப்பார். இதுவே அவரது பிரத்யேக ஸ்டைல்.

தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அந்தப் படத்திற்காக மேக்கப் டெஸ்ட் செய்து கொள்வதற்கு அமெரிக்கா பறந்துள்ளார்.  இப்படத்தில் அவருக்கு மூன்று கதாபாத்திரம். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு விதம். அதில் வயதான தோற்றமும் ஒன்று. மேக்கப் டெஸ்ட் முடிந்து சென்னை திரும்பிய உடனேயே, கோகுல் இயக்கத்தில் ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close