Published : 22,Sep 2017 01:11 PM

தனியார் விடுதியில் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை

TTV-discuss-with-MLAs-in-Hostel

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக்கோரி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துவிட்டு கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்த 18 எம்எல்ஏக்களை சபாநாயர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

கடந்த இரண்டு வாரமாக அவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு இன்று முதன்முறையாக சென்ற தினகரன் அங்கு ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தினகரன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்