Published : 23,Oct 2022 12:55 PM

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை எளிதாக வென்ற இலங்கை

Sri-Lanka-vs-Ireland-Sri-Lanka-won-by-9-wkts

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் அயர்லாந்து அணியை எளிதாக வென்றது இலங்கை.  

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஹோபர்ட்டில் இன்று நடைபெற்ற  ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 25 பந்துகளில் 34 ரன்களும், லோர்கன் டக்கர் 42 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் ஹசரங்கா, மகேஷ் தீக்சனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

image

இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 133 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் குசல் மெண்டிஸ் 43 பந்துகளில் 68 ரன்களும், சரித் அசலங்கா 22 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தனஞ்சய டி சில்வா 25 பந்துகளில்  31 ரன்கள் எடுத்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்