Published : 16,Oct 2022 07:23 PM

”என்னாஹ்ஹ் ட்ரிக்கா ஹெல்மெட்ட மாட்டி விட்ருக்காங்க” - வியந்துப்போன போலீஸ்.. வைரல் வீடியோ!

The-police-officer-caught-the-duo-red-handed-who-Swiftly-Shifts-Helmet-With-Bike-Driver

டிராஃபிக் விதிகளை கடைப்பிடிப்போரை காட்டிலும் அதனை மீறுவோரே நாட்டில் அதிகளவில் இருக்கிறார்கள். இப்படியாக போக்குவரத்து விதிகளை மீறுவதும், டிராஃபிக் போலீசாரிடம் சிக்குவதுமாக பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டேதான் இருக்கிறது. மறுபுறம் போலீசாரும் விதியை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

இருப்பினும் ஒரு சிலர் எப்படியாவது டிராஃபிக் போலீசிடம் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். அந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டி ஒருவர் நண்பரின் உதவியால் தக்க சமயத்தில் போலீசிடம் சிக்காமல் தப்பித்த நிகழ்வு குறித்த வீடியோவை போலீசார் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுதான் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

அதன்படி, பகவத் பிரசாத் பாண்டே என்ற காவல்துறை அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “வாவ் பிரதர் வாவ்” எனக் குறிப்பிட்டு, சாலைபாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் உயிர்க்கவசம் போன்றவற்றை குறிக்கும் ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அதில், சாலையோரமாக போலீசார் வாகன ஓட்டிகளை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், அவ்வழியே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாகன ஓட்டி தனது பைக்கை மெதுவாக இயக்க, பின்னால் இருந்தவர் போலீசை கண்டதும் டிரைவர் தலையில் ஹெல்மெட்டை மாட்டியிருக்கிறார்.

இதனைக் கண்ட போலீசார் பிரசாத் பாண்டே வீடியோ எடுத்ததோடு, “எதோ ஒருத்தராவது ஹெல்மெட் போட்டிருக்கிறீர்களே அதுவே சந்தோஷம்” என இந்தியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ 21 ஆயிரத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டதோடு, பலரும் போலீசாரின் கமெண்ட்ரியை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்