[X] Close

சுயாட்சிக்கு காங்கிரஸை தேடிச்செல்வதா? திருமாவிற்கு தமிழிசை கேள்வி

search-for-Congress-for-autonomy--Thiruma-is-a-Tamilissai-question

இலங்கைப் போரில் துணைநின்ற காங்கிரஸை தேடிச் சென்று சுயாட்சிக்கு துணை தேடுவதாக திருமாவளவனை பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜான் சாடியுள்ளார். 


Advertisement

மத்தியில் கூட்டாட்சியும், மாநிலங்களில் சுயாட்சியும் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் தி.மு.க செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி.க தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழிசை செளந்தரராஜன், இலங்கைப் போரில் துணைநின்ற காங்கிரஸை தேடிச் சென்று சுயாட்சிக்கு துணை தேடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இலங்கைத் தமிழர் மீதான பாசம் திருமாவளவனுக்கு எங்கே போனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close