[X] Close

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி சீரியஸ்: ஆசிரியர் கைது!

school-girl-gang-raped-by-teachers--battles-serious-brain-injury

வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி இயக்குனரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவி, சீரியசாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவர், வயிறு வலிப்பதாகக் கூறியதை அடுத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார் அவர் அம்மா. அங்கு திடீரென்று வந்த மாலதியின் ஆசிரியர் ஜகத் சிங் குஜார், ’இங்கு வேண்டாம், வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்’ என அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர், ‘மாலதிக்கு அடிவயிற்றில் பிரச்னை. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். சம்மதித்தார் மாலதியின் அம்மா. ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு மாலதியின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். மாணவிக்கு அபார்ஷன் செய்யப்பட்ட விஷயம் அப்போதுதான் தெரிய வந்திருக்கிறது அவரது அம்மாவுக்கு. இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பள்ளி இயக்குனர் ஜகதீஷையும் ஆசிரியர் குஜாரையும் கைது செய்தனர். பள்ளிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேர்ந்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

போலீசார் கூறும்போது, ‘ஜகதீஷும் குஜாரும் ஸ்பெஷல் கிளாஸ் என்று கூறி மாணவியை 2  மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கர்ப்பமான விஷயத்தைக் கேள்விபட்டு மருத்துவமனைக்கு வந்த ஆசிரியர், தனக்கு வேண்டிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்துள்ளனர்’ என்றனர்.


Advertisement

இந்நிலையில் அபார்ஷன் செய்வதற்காக மாணவிக்கு கொடுக்கப்பட்ட அதிகளவு மருந்துகளால் அவரது மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சீரியசாக இருப்பதாகவும் தற்போது அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close