Published : 29,Sep 2022 04:53 PM

புதுக்கோட்டை: பிறந்த குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பியோடிய தாய்.!

Pudukottai--The-mother-left-the-newborn-in-the-hospital-and-ran-away--

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுவிட்டு தப்பியோடிய தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு 40 வயது மதிப்புடைய நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக கடந்த 16ஆம் தேதி வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் அப்பெண்மணிக்கென உறவினர்கள் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் இது குறித்து கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்போது அந்த பெண்மணியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின்னான பதில்களை கூறியுள்ளார். தனது முகவரியையும் தவறுதலாக கூறியதோடு கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளதாகவும் கூறியுள்ளார்.

image

பிரசவித்த பெண்மணி என்பதால் அப்பெண்ணின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போலீசார் அந்தப் பெண்மணி பேசியதை வீடியோ பதிவு செய்து, அவரை புகைப்படம் எடுத்துக் கொண்டு பின்னர் விசாரணை நடத்த முடிவெடுத்தனர்.

image

இந்நிலையில், பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு, அப்பெண் தப்பியோடியுள்ளார். தப்பியோடிய தாயை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செவிலியர் பராமரிப்பில் பச்சிளம் குழந்தை தாயின்றி பரிதவிப்பது காண்போரை கலங்க செய்கிறது.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்