Published : 20,Sep 2022 07:12 PM
இரவுப் பணியின்போது காவல்நிலையத்திலேயே மது அருந்திய காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் காவல்நிலையத்திலேயே அமர்ந்து 3 காவலர்கள் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுகாவில் உள்ள கவுனிபள்ளி காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மது அருந்திய வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவலர்கள் (Constables) சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவுப் பணியின்போது காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு மது அருந்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணியின்போது காவல் நிலையத்தையே மதுக்கடையாக மாற்றிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் காவல் நிலையத்தில் அமர்ந்து மது அருந்திய மூன்று காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.