”கொஞ்சம் லேட்டு தான்.. ஆனா இதுதான் சரியான நேரம்” -ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்!

”கொஞ்சம் லேட்டு தான்.. ஆனா இதுதான் சரியான நேரம்” -ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்!
”கொஞ்சம் லேட்டு தான்.. ஆனா இதுதான் சரியான நேரம்” -ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்ரம்!

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விக்ரம் தற்போது அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் கணக்கை தொடங்கியிருக்கிறார். அதனை தெரியப்படுத்தும் விதமாக முதல் ட்வீட்டாக வீடியோ வெளியிட்டு தனது அன்பை பகிர்ந்திருக்கிறார்.

அதில், “ஹாய்… எல்லாருக்கும் வணக்கம். நான்தான் சியான் விக்ரம். நிஜமாவே நான்தான். மாறுவேஷத்துலாம் இல்ல. ரஞ்சித் படத்துக்காக ரெடியாகிட்டு இருக்கேன். ட்விட்டர்ல இருந்தா நிறைய விஷயங்கள் எல்லாருக்கும் சொல்லிடலாம். ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும் அப்படின்னு சொன்னாங்க. இங்க நான் கொஞ்சம் லேட்தான். கிட்டத்தட்ட 10 - 15 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன் ட்விட்டர் தொடங்கி. ரொம்ப லேட்டா வந்து இருக்கேன். ஆனா இதுதான் சரியான நேரம்னு நினைக்கிறேன்.

இந்த இணையதளத்துல நமக்கான அன்பு காத்துகிட்டு இருக்குன்னு நிறைய பேர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன். அதை அனுபவிக்க ட்விட்டர்ல இணைந்திருக்கேன். உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள் அனைவருக்கும் ‘ஐ லவ் யூ’. இனிமேல் இதுல தொடர்ந்து சந்திக்கலாம்” என கொஞ்சும் குரலில் பேசி அசத்தியிருக்கிறார் நடிகர் விக்ரம்.

ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட்ட அவரது முதல் ட்வீட்டிற்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இருபதாயிரத்திற்கும் மேலானார் விக்ரமின் ட்வீட்டை ரீட்வீட் செய்ததோடு, அவர் பேசிய வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் - 1ம் பாகம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கும் வேளையில் ட்விட்டரில் அவர் இணைந்திருப்பது சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸ்களை பெற்றிருக்கும் விக்ரமிற்கு ஏற்கெனவே இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com