Published : 04,Aug 2022 12:21 PM
தேனி: கஞ்சா விற்பனை செய்ததாக 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

கஞ்சா விற்பனை செய்ததாக 2 பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் போடி நகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போடி போஜன் பார்க் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் போடி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் (66), வடமலைநாச்சி (59) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் போடி நந்தவனம் காளியம்மன் கோவில் அருகே லட்சுமி (73) என்ற மூதாட்டி கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.