Published : 17,Sep 2017 02:53 AM
முதலமைச்சருக்கு தைரியம் உண்டா? ஸ்டாலின் கேள்வி

முதலமைச்சர் பழனிசாமிக்கு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும் தைரியம் இருந்தால், திமுக குறித்த அவரது விமர்சனங்களுக்கு தெருமுனையில் நின்று பதிலளிக்க தயார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களைப் பற்றி தமிழக அரசுக்கு கவலை இல்லை என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் எப்போது திமுக ஆட்சிக்கு வரும் என அனைவரும் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் இந்தியை நுழைய விடுவது வெட்கக் கேடு என்று தெரிவித்த ஸ்டாலின், தமிழகத்தை அதிமுக அரசு மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டதாகக் குறை கூறினார்.