Published : 31,Jul 2022 04:35 PM
செங்கல்பட்டு: பாலாற்றில் குளித்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பாலாற்றில் குளித்த இரண்டு சிறுமிகள் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சதீஷ் அவரது சகோதரர் குமரேசன் மற்றும் அவர்களது நண்பர் சீனுவாசன் ஆகியோர் குடும்பத்தோடு மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்கு நேற்றிரவு சென்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சதீஷின் மகள் வேதஸ்ரீ (11) மற்றும் குமரேசனின் மகள் சிவசங்கரி (15) ஆகியோர் செங்கல்பட்டு மாமண்டூர் பாலாற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார் இதைக் கண்ட சீனுவாசன் அவர்களை காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளார். ஆனால் அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரின் சடலத்தை மட்டும் மீட்டுள்ள நிலையில், சீனுவாசன் உடலை தேடி வருகின்றனர்.