Published : 30,Jul 2022 12:20 PM

பவுலர் கவனக்குறைவால் ரன் அவுட்டில் இருந்து தப்பிய அஷ்வின்

Ashwin-survives-bizarre-runout-West-Indies-bowler-waits-and-keeps-ball-in-hand-during-IND-vs-WI-1st-T20

அஸ்வின் ஏற்கனவே 'ரீச்' ஆகிவிட்டார் என்று தவறாகக் கணித்து ரன்-அவுட்டை தவறவிட்டார் மெக்காய்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்ததைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இதில் இந்திய இன்னிங்ஸின் இறுதியில் அஸ்வின் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார் தினேஷ் கார்த்திக். ஓபேட் மெக்காய் வீசிய 18வது ஓவரில் ஒரு பந்தை தினேஷ் கார்த்திக் லாங் ஆஃப் திசையில் தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓடினார். இதில் இரண்டாவது ரன்னுக்கு அஸ்வின் டைவ் அடிக்க வேண்டியிருந்தது.

image

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அஸ்வின் 'ரீச்' ஆவதற்கு முன்பே பந்து ஃபீல்டரிடம் இருந்து ஸ்டம்ப் அருகே நின்றிருந்த பவுலர் ஓபேட் மெக்காய் கைக்கு வந்தது. ஈஸியாக ரன்அவுட் செய்திருக்க வேண்டிய பந்து அது. ஆனால் அவரை அவுட் செய்யாமல் பந்தை கையில் வைத்திருந்தார் ஓபேட் மெக்காய். அப்போது அஸ்வின் வேகமாக ஓடிவந்து டைவ் அடித்து தன்மீது லேசாக மோதியபின்தான் சூழ்நிலையை உணர்ந்தார் மெக்காய். அதாவது, அஸ்வின் ஏற்கனவே ரீச் ஆகிவிட்டார் என்று தவறாகக் கணித்து ரன்அவுட்டை தவறவிட்டார் மெக்காய். இந்த ஆட்டத்தில் அஸ்வின் உடன் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் தினேஷ் கார்த்திக்.

இதையும் படிக்க: இந்திய 'ஸ்பின்னில்' சிக்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் - முதல் டி20 போட்டியில் தோல்வி!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்