தமிழக சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வியடைந்தார்.
தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணியும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தல் இன்று சென்னையில் நடந்தது. வாக்குப்பதிவுக்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 286 வாக்குகளில் ஹெச்.ராஜா 52 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மணி 232 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். இரண்டு ஓட்டுகள் செல்லாதவை. தேர்தல் முடிவுகளை தேர்தல் அதிகாரி கலாவதி தெரிவித்தார்.
சாரண சாரணியர் தேர்தலில் எச்.ராஜா போட்டியிடுவது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த விமர்சனங்களைக் கிளப்பி இருந்தன. இந்த நிலையில் அவர் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்