Published : 23,Jul 2022 10:07 AM

கிருஷ்ணகிரி: சிறுமிக்கு மது ஊற்றி குடிக்க வைத்த 6 இளைஞர்கள் கைது

Krishnagiri-6-youths-arrested-for-pouring-alcohol-on-a-girl-and-making-her-drink

தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி மது குடிப்பது போலவும், பீடி பற்ற வைத்து புகைப்பது போலவும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் வீடியோ வைரலாக பரவியது. இது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

image

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு இளைஞர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றிக் கொடுத்து, பீடியை பற்ற வைத்துக் கொடுத்ததும் தெரிய வந்தது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சங்கையா (22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

image

மேலும் இதில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்