Published : 16,Sep 2017 04:52 AM

வங்கியில் ரூ.150 கோடி மோசடி: ஜே.பி.ஆர் மகள்கள் மீது வழக்கு

Rs-50-crore-fraud-in-bank--case-against-JPR-daughters

வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.150 கோடி மோசடி செய்ததாக ஜே.பி.ஆர் மகள்கள் மற்றும் மருமகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளரான மறைந்த ஜே.பி.ஆரின் 2வது மகள் ஷீலா. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், ஜே.பி.ஆர் கல்வி அறக்கட்டளையின் பெயரை பயன்படுத்தி ரூ.150 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், ஜே.பி.ஆரின் மற்ற மகள்களான மரிய ஜூலி, ரெஜினா உள்ளிட்டோர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களுடன் உடந்தையாக இருந்ததின் அடிப்படையில், அவர்களது கணவர்கள் மரிய ஜான்சன் மற்றும் முரளி ஆகியோர் மீதும் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்