[X] Close

பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை மரத்தடியில் விட்டுச்சென்ற தாய்

A-mother-who-left-her-baby-in-a-few-hours-was-born

பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை மருத்துவமனை வளாகத்தில் வீசிச் சென்ற கொடுமையான சம்பவம் திருத்தணியில் நடந்துள்ளது.


Advertisement

திருத்தணி அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டு சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் வெளியே வந்து பார்த்திருக்கின்றனர். அப்போது, அங்குள்ள மரத்தடியில் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்பட்டு, துணி சுற்றி கீழே கிடந்ததைப் பார்த்து பதறி, குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அரசு மருத்துவமனையில் அந்த பெண் குழந்தை பிறக்கவில்லை என்றும் வெளியிலிருந்து மருத்துவமனை வளாகத்தில் விட்டுச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தை இதுவரை யாருடையது என்று தெரியாத நிலையில், பெண் குழந்தை என்பதால் விட்டுச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close