Published : 03,Jul 2022 06:20 PM
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டில் விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையே நடந்து வரும் 5வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 84 ரன்களுடன் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. முதல் இரண்டு நாட்களிலும் மழை பெய்ததால் ஆட்டம் பல முறை இடையிடையே நிறுத்தப்பட்டது. 2வது நாளில், கோஹ்லியும் பேர்ஸ்டோவும் மழை இடைவேளையின் போது ஒன்றாக நடந்து செல்வதைக் காண முடிந்தது. அப்போது இரு வீரர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இருப்பினும், 3 ஆம் நாள் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியது. துவங்கிய சில நிமிடங்களில் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் பரபரப்பான வார்த்தை பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் இங்கிலாந்து அணியின் உக்கிரமான தொடக்கத்திற்கு அது வழிவகுத்தது. முதலில் கோஹ்லி தனது கிரீஸில் நிற்கும்படி சைகை காட்டி பேர்ஸ்டோவிடம் நடந்து செல்வது வீடியோவில் பதிவானது. பின்னர் கோலி தனது கை சைகை செய்வதைக் காண முடிந்தது. பின்னர் அவர் அமைதியாக இருக்கும்படி பேர்ஸ்டோவை சைகை செய்வதைக் காண முடிந்தது.
It's tense out there between Virat Kohli and Jonny Bairstow #ENGvINDpic.twitter.com/3lIZjERvDW
— Sky Sports Cricket (@SkyCricket) July 3, 2022
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோலியுடன் பேசிய பிறகு, கோலி புன்னகையுடன் பேர்ஸ்டோவை அணுகி, அவரது கையில் செல்லமாக தட்டி விட்டு சென்றார். இந்த சம்பவம் நடக்கும்போது 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து கொண்டிருந்தது. இதற்குபின் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ இருவரும் அதிரடிக்கு திரும்ப 200 ரன்களை தொட்டு தற்போது விளையாடி வருகிறது இங்கிலாந்து. பேர்ஸ்டோ 101 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.